ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்…

 

ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2019 நவம்பர் 9ம் தேதியன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டி கொள்ள அனுமதி அளித்தது. மேலும் ராமர் கோயில் கட்டுமான பணிகளை அறக்கட்டளையின் வாயிலாக மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயிலின் கட்டுமான பணிகளுக்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்தது. அந்த அறக்கட்டளையின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்…

அந்த கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட உகந்த தேதிகள் தேர்வு செய்யப்பட்டன. ஆகஸ்ட் 3 மற்றும் 5ம் தேதிகள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டுவதற்கு நல்ல நாட்களாக அறக்கட்டளை தேர்வு செய்தது. மேலும், இந்த இரு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் வருகை தந்து ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த அறக்கட்டளை நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 5ம் தேதியை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்…

ஆகஸ்ட் 5ம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் மோடி, காலை 11 மணி முதல் மதியம் 1.10 மணி வரை அயோத்தியில் இருப்பார் என தகவல் உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகியுள்ளது. அன்று காலை 8 மணிக்கு ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை தொடங்குகிறது. காசி மற்றும் வாரணாசியை சேர்ந்த பூஜாரிகள் பூஜையை செய்ய உள்ளதாக தகவல்.