ரூ.971 கோடியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் – பிரதமர் மோடி அடிக்கல்!

ரூ.971 கோடியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் – பிரதமர் மோடி அடிக்கல்!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா தொடங்கியது.

ரூ.971 கோடியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் – பிரதமர் மோடி அடிக்கல்!

தற்போது உள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் முக்கோண வடிவில் ரூ.971 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. மோடியின் சுயசார்பு திட்டத்தின் கீழ் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் அமைய உள்ள புதிய கட்டடம் 2022ல் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைநயம், எரிசக்தி, சேமிப்பு ,பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் புதிய நாடாளுமன்றம் அமைய உள்ளது.

ரூ.971 கோடியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் – பிரதமர் மோடி அடிக்கல்!

இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு இன்று டெல்லியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்சியில் பாதுகாப்பு கருதி அமைச்சர்கள் உள்ளிட்ட 200 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

ரூ.971 கோடியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் – பிரதமர் மோடி அடிக்கல்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 888, மாநிலங்களவையில் 543 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. புதிய கட்டடத்தில் எம்பிக்களுக்கு ஓய்வறை , அனைத்து துறை நிலைக்குழு அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைய உள்ளது. டாடா நிறுவனம் கட்டும் கட்டடம் செயல்பாட்டுக்கு வந்த பின் தற்போதைய நாடாளுமன்றம் தொல்பொருள் சொத்தாகும். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றம் ஆங்கிலேயர்களால் 1921ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.