குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.. மோடி நாளை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வாய்ப்பு…

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.. மோடி நாளை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வாய்ப்பு…

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (திங்கட்கிழமை) பதில் அளிப்பார் என்று பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது. மொத்தம் 3 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் 25 கட்சிகளை சேர்ந்த மொத்தம் 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இந்த விவாதத்துக்காக மொத்தம் 15 மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.. மோடி நாளை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வாய்ப்பு…
காங்கிரஸ்

இந்த விவாதத்தில் அதிகபட்சமாக பா.ஜ.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் 18 பேர் பேசினர். அடுத்ததாக காங்கிரஸ் கட்சியிலிருந்து 7 பேர் பேசினர். எஞ்சிய 25 உறுப்பினர்கள் இதர கட்சிகளிலிருந்து விவாதத்தில் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி நாளை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.. மோடி நாளை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வாய்ப்பு…
நாடாளுமன்றம்

பிரதமர் மோடி விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால், வரும் திங்கட்கிழமையன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவையில் விவாதங்களில் உறுப்பினர்கள் அதிகளவில் பங்கேற்புடன் நீண்ட நேரம் நடைபெற்ற கலந்துரையாடலில் இதுவும் (குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்) ஒன்றாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.