அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் அண்மையில் அந்நாட்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் பெரும்பான்மை தேவையான 270 வாக்குகளை காட்டிலும் கூடுதலாக 20 வாக்குகளை பெற்று 290 வாக்குகளுடன் ஜோ பைடன் வெற்றி பெற்றார். டிரம்புக்கு 214 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நமது பிரதமர் நரேந்திர மோடியும் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில், வாழ்த்துக்கள் ஜோ பிடன், உங்கள் அற்புதமான வெற்றிக்கு. வி.பி.யாக, இந்தோ-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகவும், விலைமதிப்பற்றதாகவும் இருந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கமலா ஹாரிஸ்

இந்தியா-அமெரிக்க உறவுகளை அதிக உயரத்துக்கு கொண்டு செல்ல மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என பதிவு செய்து இருந்தார். இந்திய வம்சாவளி அமெரிக்க பெண்மணியான கமலா ஹாரீஸ் அந்நாட்டின் துணை அதிபராக உள்ளார். இதனையடுத்து, அமெரிக்க துணைஅதிபராகும் முதல் கறுப்பின அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகிறார்.