அயோத்தியில் ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் !

 

அயோத்தியில்  ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் !

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். அடிக்கல் நாட்டு விழா சரியாக 12.30க்கு தொடங்கி 12.40க்குள் நடைபெறும்.

அயோத்தியில்  ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் !

இதன் காரணமாக அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார் . லக்னோ சென்ற பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் அயோத்தி வந்தடைந்தார். அயோத்தி வந்த மோடியை தனிமனித இடைவெளியுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

அயோத்தியில்  ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் !

இந்நிலையில் காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடி முன்னதாக ஹனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது கொரோனா காலம் என்பதால் கைகளை கழுவிய மோடி வழிப்பாட்டுக்கு பிறகு கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அவருடன் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இருந்தது குறிப்பிடத்தக்கது.