தமிழகத்தில் மோடி; அலறும் எதிர்க்கட்சிகள் ; எடுபடுமா பாஜக வியூகம்!

 

தமிழகத்தில் மோடி; அலறும் எதிர்க்கட்சிகள் ; எடுபடுமா பாஜக வியூகம்!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றது.திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய டெல்லியில் இருந்து தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் மோடி; அலறும் எதிர்க்கட்சிகள் ; எடுபடுமா பாஜக வியூகம்!

அந்த வகையில் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் முருகனை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி என்று பிரச்சாரம் செய்கிறார். இதனால் இன்று காலை கோவை வரும் பிரதமர் ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு சென்று பரப்புரை மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வரும் பிரதமர் பிற்பகல் 12.50 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பிரதமருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் வருகைக்காக தாராபுரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மோடி; அலறும் எதிர்க்கட்சிகள் ; எடுபடுமா பாஜக வியூகம்!

இதையடுத்து புதுச்சேரி செல்லும் மோடி மாலை4.30 மணியளவில் அங்கு நடைபெறும் பரப்புரைக் கூட்டத்தில் பேசுகிறார் . இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய வருகின்றனர்.