முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

 

முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

கொரோனா பரவல் தடுப்பு, தடுப்பூசி விநியோகம் குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவத் தொடங்கிய நிலையில் பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அத்துடன் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

இந்தச் சூழலில் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாசலப் பிரதேசம், திரிபுரா, மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தீவிரமாகி உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த மாநிலங்களுக்கு மத்திய குழு ஒன்று அனுப்பி வைத்தது. அதில் மருத்துவர், பொது சுகாதார நிபுணர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை, சிகிச்சை முறைகள் ,தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர் . இதையடுத்து இந்த மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கடந்த ஜூலை 13 ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவல் எண்ணிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆக்சிஜன் இருப்பு குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறார்.