ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அச்சத்தை விளைவித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர் 3 கோடியே 60 லட்சத்து 45 ஆயிரத்து 050 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 223 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 54 ஆயிரத்து 607 பேர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் தீவிரமாக உள்ள நிலையில் ரஷ்யா மட்டுமே கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரும் முயற்சியை வேகப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி மூலம் உரையாடியிருக்கிறார். ரஷ்ய அதிபரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

விளாடிமர் புட்டீனுடனான தமது நீண்ட கால நட்பை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேம்படுத்த அவர் எடுத்துவரும் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.

கொவிட்-19 காரணமாக இரு நாடுகளும் சந்தித்து வரும் சவால்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் வரும் நாட்களில் கலந்தாலோசிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் இயல்புநிலை திரும்பியவுடன் அதிபர் விளாடிமிர் புட்டீனை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

Head Image PC: PTI