‘சசிகலா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி’ : பிரதமர் மோடி நாளை வருகை!

 

‘சசிகலா பிரச்னைக்கு  முற்றுப்புள்ளி’ : பிரதமர் மோடி நாளை வருகை!

பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை தமிழகம் வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மோடியின் வருகை கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சசிகலா பிரச்னைக்கு  முற்றுப்புள்ளி’ : பிரதமர் மோடி நாளை வருகை!

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாமக -தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை. பாமக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கோரிக்கை வைத்துள்ளது. இதில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதை தொடர்ந்து தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி குறித்து பேசும் என்று தெரிகிறது. ஏற்கனவே பலமுறை கூட்டணி குறித்துப் பேச அழைத்த நிலையில் அதிமுக கண்டுகொள்ளாததால் தேமுதிக கடும் அதிருப்தியில் உள்ளது.

‘சசிகலா பிரச்னைக்கு  முற்றுப்புள்ளி’ : பிரதமர் மோடி நாளை வருகை!

இந்நிலையில் நாளை சென்னை வரும் பிரதமர் மோடி ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அதில் சென்னை, வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் , இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைக்கிறார். நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு அதிமுக மற்றும் பாஜக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

‘சசிகலா பிரச்னைக்கு  முற்றுப்புள்ளி’ : பிரதமர் மோடி நாளை வருகை!

இதனால் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து பேசஉள்ள பிரதமர் மோடி கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு, பாஜக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க உள்ளாராம். குறிப்பாக சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.