1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி!

 

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி!

உத்தரகண்ட் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்தியாவையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த ஒரு மாதத்தற்கும் மேலாக சற்று குறைந்துள்ளது. எனவே, மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், உத்தரகண்ட், பீகார், சட்டீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து விட்டன.

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி!

உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறந்து விட்டன. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் சூழலில், பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. மாஸ்க் அணிதல், சமூக விலகல், கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே, செப்டம்பர் 21ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. மாணவர்களை அனுப்ப வேண்டியது கட்டாயமில்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு விருப்பம் இருக்கும் பெற்றோர் மட்டும் அனுப்பலாம். குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் இரண்டுமே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.