“திமுக வெற்றி நாங்கள் போட்ட பிச்சை” பாதிரியாரின் சர்ச்சை பேச்சு

 

“திமுக வெற்றி நாங்கள் போட்ட பிச்சை” பாதிரியாரின் சர்ச்சை பேச்சு

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் போட்ட பிச்சைதான் சட்டமன்றத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு காரணம் என கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் பொதுஇடத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“திமுக வெற்றி நாங்கள் போட்ட பிச்சை” பாதிரியாரின் சர்ச்சை பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, “எத்தனை கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தினாலும், எத்தனை கோயிலில் துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் இந்துக்கள் ஒருவர் கூட ஓட்டு போட போவதில்லை. உங்களது வெற்றி கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போட்ட பிச்சை. இந்த வாக்குகள் உங்கள் திறமைக்கு கிடைத்தவை அல்ல. நாடார் வாழும் பகுதியில் ரூ.2000 வழங்கு ஓட்டு போட வைத்தனர். பாதிரியார்கள் நன்கு படித்தவர்கள், நாங்கள் ஒன்றும் மணி அடிக்கிற பூசாரி கிடையாது. மோடியின் கடைசி காலம் மிகவும் பரிதாபமாக இருக்கும். கடவுள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அமித்ஷா, மோடியின் உடலை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலை உருவாகும்” எனக் கூறினார்.

சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையா மீது ஜாதி விரோத உணர்வை தூண்டுதல், கொலை மிரட்டல், மத மோதல்களை உருவாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே தான் பேசியதை திரித்து கூறி விட்டனர் எனக் கூறியுள்ள பாதிரியார் ஜார்ஜ், இனிவரும் காலங்களில் இப்படி பேச மாட்டேன் என வீடியோ வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.