Home இந்தியா திருப்பதியில் முதல் முறையாக கொரோனாவால் அர்ச்சகர் உயிரிழப்பு!

திருப்பதியில் முதல் முறையாக கொரோனாவால் அர்ச்சகர் உயிரிழப்பு!

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருப்பதியில் முதல் முறையாக கொரோனாவால் அர்ச்சகர் உயிரிழப்பு!

திருப்பதியில் முதல் முறையாக கொரோனாவால் அர்ச்சகர் உயிரிழப்பு!

திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட  170ற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பதியில் முதல் முறையாக கொரோனாவால் அர்ச்சகர் உயிரிழப்பு!

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக அர்ச்சகர் ஒருவர் கொரோனா பாதிப்பால் இறந்தார். முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்தி என்ற 75 வயதான அர்ச்சகர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் உயிரிழந்தார். திருப்பதி நகரிலும், கோவில் ஊழியர்கள் மத்தியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை, எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பதியில் முதல் முறையாக கொரோனாவால் அர்ச்சகர் உயிரிழப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் இயங்காததால் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதால் மாணவ, மாணவிகள் செல்போனிலும் இணையங்களிலும் மட்டுமே மூழ்கி இருக்கின்றனர். பாட நேரம் போக மற்ற நேரங்களிலும்...

“கொரோனா தடுப்பூசிகள் மீதான ஜிஎஸ்டியை தள்ளுபடி செய்க” – பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் என நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை இந்த...

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பேருந்து… திருப்பூர் தனியார் அமைப்புகள் புதியமுயற்சி…

திருப்பூர் திருப்பூரில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக தனியார் அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் பேருந்து சேவை விரைவில் தொடங்க உள்ளது. திருப்பூர்...
- Advertisment -
TopTamilNews