முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் தேவையற்ற சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம்! – சாத்தான்குளம் தொடர்பாக ராமதாஸ் கருத்து

முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் தேவையற்ற சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம்! – சாத்தான்குளம் தொடர்பாக ராமதாஸ் கருத்து

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் தேவையற்ற சர்ச்சை, பதற்றத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

http://

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீடில், “சாத்தான்குளம் காவல்நிலைய சாவுகள் தொடர்பாக கொலை வழக்கு பதிந்து ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் கைது.

முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் தேவையற்ற சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம்! – சாத்தான்குளம் தொடர்பாக ராமதாஸ் கருத்து

கடந்த 23-ஆம் தேதி அறிக்கையில் இதையே தான் வலியுறுத்தியிருந்தேன். அன்றே இந்நடவடிக்கையை எடுத்திருந்தால் தேவையற்ற சர்ச்சைகளையும், பதற்றங்களையும் தவிர்த்திருக்கலாம்!” என்று கூறியுள்ளார்.

http://

மற்றொரு ட்வீடில், “காவிரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய வசதியாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பாமகவின் கோரிக்கையை ஏற்று உழவர்கள் நலன் காக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது; அரசுக்கு நன்றி!” என்று கூறியுள்ளார்.