‘எரிபொருள் விலை உயர்ந்ததன் காரணம் முந்தைய அரசுகள் தான்’ – பிரதமர் குற்றச்சாட்டு!

 

‘எரிபொருள் விலை உயர்ந்ததன் காரணம் முந்தைய அரசுகள் தான்’ – பிரதமர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் எண்ணெய் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிபொருள் விலை அதிகரித்ததன் முக்கிய காரணம் முந்தைய இருந்த அரசுகள் தான். எரிபொருள் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்து இருப்பதை அந்த அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்காததால் தற்போது சாமானிய மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று கூறினார்.

‘எரிபொருள் விலை உயர்ந்ததன் காரணம் முந்தைய அரசுகள் தான்’ – பிரதமர் குற்றச்சாட்டு!

தொடர்ந்து, வெளிநாடுகளை எரிபொருளுக்காக சார்ந்து இருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தற்போது நிலவரத்தின்படி வெளிநாடுகளிலிருந்து 85% எரிபொருள் பெறப்படுகிறது என்றும் இதை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 2030ஆம் ஆண்டில் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 40% புதுப்பிக்க தக்கதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, கந்தகம் நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அந்த நிகழ்ச்சியில் மோடி நாட்டுக்காக அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.