சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை செய்யுங்க…!

 

சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை செய்யுங்க…!

மக்கள் மத்தியில் அதிகம் புழங்கும் ஒரு நோயாக உருமாறிவிட்டது சர்க்கரை நோய்.முன்பெல்லாம் இந்த நோயை பணக்காரர்களின் வியாதி என்று கூறுவார்கள்.காரணம் பலரின் வீட்டில் அரிசி சாதம் இருக்காது; பணம் படைத்தவர்கள் மட்டுமே அரிசி சாதம் சாப்பிட்டு வந்த காலத்தில் சர்க்கரை நோய் அவர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. தற்போதைய உள்ள தற்போது உள்ள காலகட்டத்தில் மனவழுத்தம், தனிப்பட்ட பிரச்சினைகள் , நேரக் கட்டுப்பாடு ஆகியவற்றை கையாளுவதில்லையே பல பிரச்சனைகள் ஒளிந்துள்ளது. இது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு நாம் பழகிவிட்டோம். அதனால் அதனுடன் சேர்த்து பல நோய்களும் நம்மை வந்து ஒட்டிக் கொள்கிறது.

சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை செய்யுங்க…!

நீரிழிவு நோய் என்று சொல்லப்படும் சர்க்கரை நோய் எளிதாக நம்மை வந்து அடைந்துவிடுகிறது. இதை எதிர்த்து நம்மால் போராட முடியும். கவனமான ஒரு வாழ்க்கை முறையை நாம் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் டைப் 2 சர்க்கரை நோய் இல்லாமல் நம்மால் வாழ முடியும். அதிக உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .சாப்பிடும் உணவில் இன்சுலின் அளவு அதிகரிக்க அது சக்கரையை அதிகரிக்கிறது. இதனால் கொழுப்பு சேர்ந்து உடலில் உள்ள இன்சுலின் அதன் எதிர்ப்பையும் அதிகரிக்க செய்கிறது. உணவை அளவோடு சாப்பிட வேண்டும் என்பது சக்கரை நோயை தடுக்கும் முதல் வழிமுறை.

சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை செய்யுங்க…!

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். முடிந்தவரை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.நீச்சல் ,நடனம், யோகா போன்ற உடற்பயிற்சிகளை நாம் அன்றாடம் செய்யும் போது நாம் தானாகவே சுறுசுறுப்பான மனிதராக மாறி விடுகிறோம் .அதேபோல் அதிக உணவுகளை எடுத்துக் கொண்டாலும் இது போன்ற உடற்பயிற்சிகளை செய்யும் போது நம் எடை கட்டுக்குள் வந்துவிடுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது நடை பயணம் மேற்கொள்வது நல்லது.

சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை செய்யுங்க…!

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உப்பு, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக ஓட்ஸ், கீரை, பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள் உள்ளிட்ட உணவுகளை நாம் கொள்ளலாம்.நீரிழிவு நோயில் இருந்து மீள முக்கியமாக பின்பற்ற வேண்டியது மது அருந்துதலை தவிப்பது. மது அருந்துவதை தவிர்க்கும் பட்சத்தில் நீரிழிவு நோய் படிப்படியாக குறையும். அதேபோல் புகைப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும். புகைப்பிடித்தல் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. அதேபோல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த உணவு நார்சத்து உணவுகள் தான். அதிகமாக நீரை எடுத்துக்கொள்ளும் போதும் நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்..