Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்கணுமா? அப்போ இந்த நியூஸை படிங்க!

கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்கணுமா? அப்போ இந்த நியூஸை படிங்க!

இன்றைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாகவும், சகஜமான ஒன்றாக மாறி உள்ள நோய் என்றால் அது சிறுநீரக கல். கிட்னி ஸ்டோன் என்று சொல்லப்படும் சிறுநீரக கல், முழுக்க முழுக்க நாம் உணவு சார்ந்த அலட்சியங்களால் உருவாகிறது.

ஒரு மனிதன் தினசரி தினமும் 3 முதல் மூன்றரை லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.நாம் உடலில் சுமார் 85 சதவீதம் நீரால் தான் வளர்சிதை மாற்றங்கள் போன்றவை நடந்துகொண்டிருக்கிறது. மழை மற்றும் குளிர் காலங்களில் நீர் அதிகமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் கோடை காலத்தில் வியர்வை மூலம் நமது உடலில் நீரிழப்பு நம்மை அறியாமலே நடக்கிறது. இது போன்ற காலக்கட்டங்களில் நாம் அதிக அளவு நீரை எடுத்துக் கொள்வது நம் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. நிறைய பேர் இரண்டு லிட்டருக்கு மேல் தண்ணீர் எடுப்பதில்லை. சிலர் சாப்பிட்ட பின்பு மட்டும்தான் தண்ணீர் குடிப்பார்கள். அதை தவிர்த்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு அறவே இருக்காது. தண்ணீர் சரியாக எடுக்காத நபர்களுக்குத் தான் முதலில் சிறுநீரக கற்கள் உண்டாகின்றது.

அதேபோல் நாம் சாப்பிடும் உணவுகளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருக்கும் போது சிறுநீரக கற்கள் உருவாகுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தக்காளியின் விதையில் இருந்து தான் சிறுநீரக கற்கள் உருவாகிறது. அதனால் நான் தக்காளியை எடுத்துக் கொள்வதில்லை என்று சொல்வார்கள். ஆனால் தக்காளி விதைகளிலிருந்து சிறுநீரக கற்கள் உருவாவது இல்லை. அதனுடைய அமிலத்தன்மை கால்சியதோடு சேர்ந்து கால்சியம் ஆக்சலேட் ஸ்டோன் ஆக மாறி கற்களை உருவாக்குகிறது. அதனால் தக்காளி பழத்தை தவிர்ப்பது நல்லது.

இதுதவிர முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற பொருட்களை சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் எடுக்கக்கூடாது. சிறுநீரக கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. அத்துடன் சிறுநீரை பெருக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. இதனால் வாழைத்தண்டு எடுத்துக்கொள்வது ஆகச் சிறந்த மருந்தாகும்.

அதேபோல் வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது சிறுநீரக கற்கள் வருவதை தவிர்க்க முடிகிறது .பப்பாளி ,முருங்கை கீரை போன்ற உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரக கற்களில் இருந்து நீங்கள் விடுபடலாம்.பார்லி கஞ்சி ,சுரக்காய் கூட்டு போன்றவை எடுத்துக் கொள்ளும்போது சிறுநீர் பெருக்கம் அதிகரிக்கும். அதேபோல் வாழைத்தண்டு ,முள்ளங்கி ,பார்லி ,சுரைக்காய் , நாட்டு பீர்க்கங்காய் போன்றவை எடுத்து கொள்ளும் போது கற்கள் மீண்டும் திரும்பத் திரும்ப வராமல் இருக்கும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

திமுகவுடன் மமக, முஸ்லீம் லீக் தொகுதி பங்கீடு கையெழுத்தானது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், மமகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு...

கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கன ரணாவத், இந்தி பாடலாரிசியர் ஜாவித் அக்பர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியை எப்படி இயற்கையான ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது...

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

பொதுவாக குளியலுக்கு பயன்படுத்தப்படுவது நல்லெண்ணெய். உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணெயை நன்றாக தேய்த்துக் கொண்டு, ஊற வைத்து விட்டு குளிர்ப்பார்கள். ஆனால்? இது என்ன விளக்கெண்ணெய் குளியல்? கசப்புத் தன்மையுடன்...
TopTamilNews