வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து, மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை

வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து, மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை

தஞ்சாவூர்

தஞ்சையில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து, மளிகைக்கடை உரிமையாளரின் வீட்டில் 75 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து, மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் வசிப்பவர் மளிகை கடை உரிமையாளர் மலையப்பெருமாள். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு பாலாஜி எனிற மகனும், நிவேதா என்ற மகளும் உள்ளனர். நேற்று மதிய உணவிற்காக பாலாஜி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தாயார் சாந்தி மற்றும் தங்கை நிவேதா ஆகியோர் அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, இருவரது கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, காலை 10 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீட்டிற்குள் வந்த 3 மர்மநபர்கள், தங்களை கட்டிப்போட்டு விட்டு பீரோவில் இருந்த 75 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றதாக கூறினார்கள்.

வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து, மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை

இதுகுறித்த பாலாஜி, அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தஞ்சை நகர டிஎஸ்பி பாரதிராஜா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களையும் சேகரித்தனர். தொடர்ந்து, வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ரெயின்கோட் மற்றும் முக கவசம் அணிந்த 3 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.