புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

 

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் புரிந்த முதல்வர் நாராயணசாமியின் ஆட்சி கவிழ்ந்தது. அடுத்தடுத்து ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்தார்கள். அதனால், ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நிலவியது.

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

கடந்த 22ம் தேதி, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். எதிர்க்கட்சிகளும் ஆட்சிக்காக முன்வரவில்லை. இதனால், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி உள்துறை அமைச்சகத்துக்கு தமிழிசை கடிதம் எழுதியிருந்தார்.

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

இந்த நிலையில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலுக்கு பின் அமைச்சரவை கலைக்கப்படும். அதன் பிறகு மாநிலத்தை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.