மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!

 

மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசு நாடாக அறிவித்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு தொடங்கிய குடியரசுப்பயணம் 72ஆவது ஆண்டை எட்டியுள்ளது. அதன்படி நாளை குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் ஆண்டுதோறும் நாடு முழுவ்தும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்க விருதுகள் வழங்கப்படும்.

மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!

இந்நிலையில் வீர தீர செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்த 20 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘தகைசால் விருது’ சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கும், கூடிதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், தமிழக சிறப்பு காவல்படை ஐஜிபி மணிகண்ட குமார் ஆகியோருக்கு வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ‘மெச்சத்தகுந்த விருது’ சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு, சிறப்பு புலனாய்வு ஐஜி கபில் குமார் சரத்கர் உள்ளிட்ட 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.