ஒருபக்கம் விவசாயிகள் போராட்டம் – மறுபக்கம் அரசின் தேநீர் விருந்து

 

ஒருபக்கம் விவசாயிகள் போராட்டம் – மறுபக்கம் அரசின் தேநீர் விருந்து

நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதேபோல் டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றிவித்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மிகக்குறைவான பார்வையாளர்களுடன் எளிமையாக நடைபெற்றது. டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க மறுபுறம் விவசாயிகளின் போராட்டம் வன்முறையாக வெடித்தது.

ஒருபக்கம் விவசாயிகள் போராட்டம் – மறுபக்கம் அரசின் தேநீர் விருந்து

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தின நாளான இன்று 3 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியின் எல்லைக்குள் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைந்து செங்கோட்டையில் தங்கள் கொடியை ஏற்றினர். இதில் திடீரென வன்முறையை வெடித்ததால் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் நீடிக்கும் சூழலில், இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரு சில இடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Image

விவசாயிகள் மீதான அடக்குமுறைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். டெல்லியே பற்றி எரியும் சூழலில் குடியரசு தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.