’எனக்கு வேணாம் கொரோனா தடுப்பூசி’ சொல்வது எந்த நாட்டு அதிபர் தெரியுமா?

 

’எனக்கு வேணாம் கொரோனா தடுப்பூசி’ சொல்வது எந்த நாட்டு அதிபர் தெரியுமா?

கொரோனா பீதியில் ஒவ்வொரு நாளும் யுகமாகக் கழிந்து வருகிறது. உலகம் முழுவதுமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. வல்லரசு நாடுகள் என பெருமை பேசும் நாடுகள் கூட கொரோனாவை தடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 19 லட்சத்து 88 ஆயிரத்து 563 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 27 லட்சத்து 89 ஆயிரத்து 207 நபர்கள்.

’எனக்கு வேணாம் கொரோனா தடுப்பூசி’ சொல்வது எந்த நாட்டு அதிபர் தெரியுமா?

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 49 ஆயிரத்து 121 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,77,50,235 பேர்.

கொரோனாவில் சிக்கியிருக்கும் நாடுகளில் பிரேசிலும் ஒன்று. பிரேசில் நாட்டில் 62,38,350 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று மட்டுமே அந்நாட்டில், 33,780 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். பிரேசிலில் நேற்று மட்டுமே 501 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள்.

’எனக்கு வேணாம் கொரோனா தடுப்பூசி’ சொல்வது எந்த நாட்டு அதிபர் தெரியுமா?
(Brasília – DF, 24/03/2020) Pronunciamento do Presidente da República, Jair Bolsonaro em Rede Nacional de Rádio e Televisão..Foto: Isac Nóbrega/PR

பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சோனரோவுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை எடுத்துக்கொண்டு நலம் பெற்றார். ஆனால், அவர் எங்குமே முகக் கவசம் அணிவதை விரும்ப வில்லை. மாஸ்க்கைத் தவிர்க்கவும் அவர் கூறியுள்ளார். இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, தமக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம். அதை போட்டுக்கொள்ளாமல் இருப்பதும் என் உரிமை என்றும் பேசியிருக்கிறார்.

உலகமே கொரோனா தடுப்பூசி எப்போது நடைமுறைக்கு வரும் என ஆவலோடு காத்திருக்கும் வேளையில் அதிகப் பாதிப்புகளைச் சுமக்கும் ஒரு நாட்டின் அதிபரே இப்படிச் சொன்னால், அந்த நாட்டின் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீது எப்படி நம்பிக்கை வரும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.