உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்துவந்த சைக்கிள் பந்தய வீரருக்கு ‘சைக்கிள்’ பரிசு!

 

உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்துவந்த சைக்கிள் பந்தய வீரருக்கு ‘சைக்கிள்’ பரிசு!

டெல்லியில் 9ம் வகுப்பு படித்துவரும் வளரும் சைக்கிள் பந்தய வீரரான ரியாசுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கி அவரை ஊக்குவித்துள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரியாஸ், சைக்கிள் பந்தயத்தில் கெட்டிக்காரர். இவர் டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவருகிறார். தனது தந்தை கஷ்டப்படுவதை பார்த்து அவருக்கு உதவும் நோக்கிலும் தனது பயிற்சி மற்றும் படிப்புக்காக உணவகம் ஒன்றில் இவர் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்துவந்தார். 2017ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் பந்தய போட்டியில் வெண்கள பதக்கம் வென்றார்.

சர்வேதச சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட ரியாஸ் சைக்கிள் வாங்க கூட வசதி இல்லாததால் சைக்கிள் கடன் வாங்கி அதில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனை அறிந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் , பக்ரீத் பண்டிகையையொட்டி மாணவர் ரியாசுக்கு புதிய சைக்கிள் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி அவரது திறமையை ஊக்குவித்துள்ளார்.