பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆய்வறிக்கை தயார்… ஆலோசித்து வருகிறோம்! – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆய்வறிக்கை தயார்… ஆலோசித்து வருகிறோம்! – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் எப்போது திறக்க வேண்டும், திறக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் என்ன என ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தன் சொந்த மாவட்டத்தில் உள்ளார். அங்கு தினமும் ஏதாவது ஒரு அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை, திறப்பு விழாவில் பங்கேற்கிறார். தினமும் அவரிடம் அங்குள்ள நிருபர்கள் பள்ளி திறப்பது எப்போது, பாட புத்தகங்கள் வழங்குவது எப்போது என்று கேட்டு வருகின்றனர். அவரும் சொன்ன பதிலையே திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.

பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆய்வறிக்கை தயார்… ஆலோசித்து வருகிறோம்! – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் நம்பியூரில் ரூ.2 கோடி மதிப்பிலா திட்டப் பணிகளை அவர் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசும்போது, “நாட்டிலேயே முதன் முறையாக தொலைக்காட்சி சேனல் மூலமாக தமிழக அரசு பாடம் நடத்த உள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் பாடம் நடத்தப்படும். பள்ளிகள் திறப்பது தொடர்பாக 18 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பள்ளி திறப்பது, வழிகாட்டுதல் தொடர்பாக அறிக்கையை தயார் செய்துள்ளனர். அவர்கள் அறிக்கையில் கூறியுள்ள விஷயங்களை பரிசீலித்து அறிவிப்போம்.

பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆய்வறிக்கை தயார்… ஆலோசித்து வருகிறோம்! – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
பள்ளி திறக்கப்படுவதற்கு முன்பு பெற்றோரிடம் ஆலோசனை கேட்போம். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளைத் திறக்க முடியாது. 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகிப்பதில் சிரமம் உள்ளது. இது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் இதுவரை 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.