குழந்தைக்கு டிரை செய்றீங்களா… அப்போது இது உங்களுக்கான விஷயம்தான்!

 

குழந்தைக்கு டிரை செய்றீங்களா… அப்போது இது உங்களுக்கான விஷயம்தான்!

குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு முதலில் வாழ்த்துகள்! குழந்தைப்பேற்றை எதிர்கொள்வது என்று முடிவெடுப்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மைல் கல். மனம் முடிவு செய்தால் போதுமா, உடல் தயாராக வேண்டாமா? குழந்தைப்பேறு அடைய நினைக்கும் பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

குழந்தைக்கு டிரை செய்றீங்களா… அப்போது இது உங்களுக்கான விஷயம்தான்!

குழந்தைப்பேறுக்கு முன்பு என் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கேள்வி எழலாம். இது குழந்தைப்பேற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, குழந்தையின் எதிர்கால நலனை பாதுகாக்கிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை போக்க உதவுகிறது.

குழந்தைப்பேறுக்கு முயற்சி செய்யும் பெண்கள் சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ஃபோலிக் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தடை மாத்திரைகள் பயன்படுத்தி வந்தவர்கள் மாதவிலக்கு வந்த பிறகு எக்காரணத்தைக் கொண்டு அந்த மாத்திரைகளை திரும்ப எடுக்கக் கூடாது.

மாதவிலக்கு வந்தபிறகு ஃபோலிக், இரும்புச் சத்து மாத்திரையுடன் மல்டி வைட்டமின் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் காரணமாக இயற்கையாக உடலில் ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

ஊட்டச்சத்து மாத்திரைகள் மூலம் சத்துக்கள் கிடைத்துவிடும் என்று அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது. நன்கு சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான சரிவிகித உணவாக இருக்கட்டும். முழு தானியங்கள், காய்கறி, பழங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மாதவிலக்கு வந்து நின்றதற்கு பிறகு 30 நிமிடங்களுக்கு அதிக அழுத்தம் தராத வகையில் எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். முதல் இரண்டு வாரங்கள் வரை கடின பயிற்சிகள் செய்யலாம். அதன்பிறகு கடின பயிற்சிகள் செய்யவே வேண்டாம்.

சினைப்பையில் இருந்து முட்டை விடுபடும் நாளை கணக்கிட்டுக்கொள்வது நல்லது. ஓவலேஷன் எனப்படும் முட்டை விடுபடும் நாளை கண்டுபிடிப்பது எப்படி என்று இணையத்திலேயே நிறைய வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அல்லது உங்கள் மகளிர் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு பல் மருத்துவரை அணுகி பல், ஈறுகளில் பிரச்னை உள்ளதா என்று பார்க்க வேண்டும். பல் மற்றும் ஈறில் பிரச்னை இருந்தால் முதலில் அதை சரி செய்ய வேண்டும். இதுவும் கூட கர்ப்பத்துக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

உடல் எடையை உங்கள் உயரத்துக்கு எவ்வளவு இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறதோ அதற்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மனப் பதற்றம், மன அழுத்தத்தைத் தவிர்த்துவிட்டு துணைவருடன் அன்பாக இருங்கள்.

இதற்குள்ளாக முட்டைவிடுபடும் நாள் வந்துவிடும். அப்போது மகிழ்ச்சியான, திருப்தியான தாம்பத்திய உறவை மேற்கொள்ளுங்கள். அப்போது குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு அதிகரிப்பதுடன், குழந்தையின் ஆரோக்கியமும் காக்கப்படும்!