விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டமாக்குவேன் – பிரேமலதா விஜயகாந்த்

 

விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டமாக்குவேன் – பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, பாமகவுக்கு இணையான 23 தொகுதிகளை ஒதுக்காததால், கூட்டணியில் இருந்து வெளியேறி, அமமுகவுடன் இணைந்தது.

இந்த சூழலில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில், கூட்டணியின் சார்பில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதனையடுத்து பண்டாரம் குப்பம், செம்பளா குறிச்சி, பெரியவடவாடி, விஜயமாநகரம், ஸ்ரீராம் நகர், பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு, தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனையை திறந்த அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டமாக்குவேன் – பிரேமலதா விஜயகாந்த்

நல்லூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், “தேர்தலில் வெற்றி பெற்றால் விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டம் ஆக்குவேன். அதுதான் என் முதல் வேலை. விருத்தாசலம் மாவட்டமாக உருவானால் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும் விருத்தாசலம் தொகுதிக்கு சிறப்பான அடிப்படை வசதிகளை செய்து தருவேன்” எனக் கூறினார்.