தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்தது தவறு- பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

இஸ்லாமியர்களுக்கு ரமலான் உதவி பொருட்கள் தரும் நிகழ்வு தேமுதிக சார்பில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அரசு சொல்லும் வழிமுறைகள் பின்பற்றினால், சென்னை ரெட் zone இருந்து green zone விரைவில் வரும். மனித நேயம் தான் வெல்லும் என கொரோன மக்களுக்கு கற்று தந்துள்ளது. பலரும் கஷ்டப்படும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள், ஏழை மக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.


தமிழக அரசு மிக சிறப்பாக கொரோன தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருந்து இருக்கலாம். அந்த ஒரு செயல்பாட்டை தவிர்த்து மற்ற விஷயங்கள் சிறப்பாக உள்ளது. சுகாதாரத்துறையும் சிறப்பாக செயல்படுகிறது. தி.மு.க ஆட்சியில் இருந்தால், இதை விட சிறப்பாக என்ன செய்து விடப் போகிறார்கள்?அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வருவது வரவேற்க தக்கது” எனக்கூறினார்.

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...