தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

 

தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

பொதுக்குழுக் கூட்டம் கூட்டி தேர்தல் கூட்டணி முடிவுகள் குறித்து அறிவிப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளன. அதற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிவிட்டன. தேர்தலுக்கான கூட்டணி பற்றி கட்சிகளுக்குள்ளாக பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது குறித்த கூட்டணிகள் தொடருமா? அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணியில் மாற்றம் இருக்குமா? என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கை கோர்ப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மௌனம் சாதிக்கிறது.

தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

இந்த நிலையில், செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூட்டி விரைவில் எங்களின் முடிவு அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ‘தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். விரைவில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். தேமுதிகவை பொறுத்தவரை முரசு சின்னத்தில் தான் போட்டியிடுவோம். எங்களுக்கான தொகுதிகளை நிச்சயம் கேட்போம். தற்போது ஒருதலைபட்சமாக நான் கூற முடியாது. கூட்டணி தரப்பில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரை தேமுதிக ஏற்கும்’ என்றும் அவர் கூறினார்.