கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிட்டால் தனித்துப்போட்டி: பிரேமலதா விஜயகாந்த்

 

கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிட்டால் தனித்துப்போட்டி: பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேசமயம் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் தேமுதிகவும், பாமகவும் இழுபறியில் உள்ளது. இந்நிலையில் மதுரவாயிலில் சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன், பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிட்டால் தனித்துப்போட்டி: பிரேமலதா விஜயகாந்த்

கூட்டத்திற்கு பின் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நாளை முக்கிய முடிவை அறிவிப்பார். தேர்தல் பிரச்சாரத்திற்கு கேப்டன் கட்டாயம் வருவார். 234 தொகுதியிலும் முகவர்கள் அமைத்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய முதல் கட்சி தேமுதிக. ஆண்ட, ஆளும் கட்சி கூட இதனை செய்யவில்லை. இந்த முறை அனைத்தும் திட்டமிட்டு செய்து வருகிறோம். தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்கும். விஜயகாந்த் நலமாக உள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கேப்டன் பிரச்சாரத்தில் கட்டாயம் ஈடுபடுவார். இந்த புத்தாண்டு தொண்டர்களுடன் கொண்டாடாதது வருத்தம் அளித்தது. அதனால் தங்கள் திருமண நாளை தொண்டர்களுடன் கொண்டாவுள்ளோம்” எனக் கூறினார்.