Home அரசியல் சசிகலா விடுதலையாகி வந்து அரசியலில் நுழையவேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

சசிகலா விடுதலையாகி வந்து அரசியலில் நுழையவேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் அனுமதி அளித்தால் போட்டியிடுவேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொது உறுப்பினர்கள், பூத் முகவர்கள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து மாங்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “தொண்டர்கள் தான் ஆணி வேர், 7 மண்டலங்களாக பிரிக்க விஜயகாந்த் உத்தரவிட்டார். நாளைக்கு தேர்தல் வைத்தாலும் தயாராக உள்ளோம், தலைமை கழகத்தில் ஒரு வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் என 37 தொகுதியை எனது பொறுப்பில் விஜயகாந்த் வழங்கி உள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் 5 வக்கீல்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு தெருவிலும் 5 பெண்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும், 234 தொகுதிகளிலும் பாடுபட வேண்டும், கூட்டணி இருக்கா இல்லையா என்பதை தலைவர் முடிவு எடுப்பார். கூட்டணியில் இருப்பதால் பொறுமையாக காத்து கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல். திமுக, அதிமுகவிற்கே முதல் தேர்தல் இதனால் யாரும் பெரிய ஆள் என நினைக்க வேண்டாம், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தல் கணிப்பு கூறுகிறது. தேமுதிக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இப்போது வரை அதிமுக ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தேமுதிக, பாஜக சின்னம் தமிழகம் முழுக்க கொண்டு சென்றவர் விஜயகாந்த், தேமுதிக ராசியான கட்சி. 6 தொகுதி வெற்றி பெற்றால் தான் தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வரும். தேர்தல் அறிக்கையை கொடுத்து புரட்சியை ஏற்படுத்தியவர் விஜயகாந்த், அவர் சொல்லிய திட்டத்தை ஆந்திராவிலும், டெல்லியிலும் கொண்டு வந்து கடைபிடிக்கின்றனர். எனக்கு இரண்டு பணி உள்ளது. ஒன்று விஜயகாந்த்தை காக்க வேண்டும், அவர் உருவாக்கிய கட்சி காக்க வேண்டும்.

தேர்தல் கிளைமாக்சில் விஜயகாந்த் வர தயாராக உள்ளார். இந்த தேர்தலில் சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிக்க வேண்டும் என்றால் யாராலும் தடுக்க முடியாது. விஜயகாந்த் அனுமதி கொடுத்து ஆண்டவன் அருள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்று தெரியாது. ஒரு பெண்ணாக சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவிற்காகவே வாழ்ந்தவர் சசிகலா, சசிகலாவுக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது. அவர்களால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள். ஆனால் தற்போது அவரை வேண்டாம் என்று சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது. அவரது விடுதலையை வரவேற்கிறேன். அவர் விடுதலையாகி வந்து தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என்று பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன்” என தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் #மன்னிப்பாவது_மயிராவது!

மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழா நாள் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். ஆனால்...

தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 30 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா...

சரத்குமார் தலைமையில் உருவானது 3 அவது அணி! அதிமுகவுக்கு ஆபத்து!!

அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பிரேமலதா புலம்பிவருகிரார். அதேபோல் அதிமுக...

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் இமான் அண்ணாச்சி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட...
TopTamilNews