வேல் யாத்திரையால் நாட்டிற்கோ மக்களுக்கோ எந்த பலனும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

 

வேல் யாத்திரையால் நாட்டிற்கோ மக்களுக்கோ எந்த பலனும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் 3 அல்லது 4மாதங்களுக்கு பிறகு திறக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது. 2021ஆம் அண்டு கூட்டணி குறித்து கேப்டன் தான் முடிவு செய்வார். டிசம்பர் அல்லது ஜனவரியில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டி தேமுதிக கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும். வேல் யாத்திரைக்கான் அவசியம் என்ன?
கருப்பர் கூட்டத்திற்காக வேல் யாத்திரை நடத்தப்படுகிறதா? பாஜக கட்சியின் வளர்ச்சிக்காகவே வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. வேல் யாத்திரையால் நாட்டிற்கோ மக்களுக்கோ எந்த பலனும் இல்லை.

வேல் யாத்திரையால் நாட்டிற்கோ மக்களுக்கோ எந்த பலனும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தேமுதிகவின் கருத்து தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பை 3 அல்லது 4 மாதங்களுக்கு தள்ளிப்போட வேண்டும். கேப்டனும் நானும் கொரோனாவின் வீரியம் குறித்து நன்கு உணர்ந்து இருக்கிறோம். ஒட்டுமொத்த மக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்” எனக் கூறினார்.