விரைவில் கேப்டன் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்: பிரேமலதா விஜயகாந்த்

ராகு- கேது பெயர்ச்சியையொட்டி ராமேஸ்வரத்துக்கு வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “தொண்டர்களுடைய விருப்பம் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து நிற்க வேண்டும் என்பதுதான். ஆகவே செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கேப்டன் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அந்த தை மாதம் நல்ல ஒரு முடிவை கேப்டன் அறிவிப்பார். பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நடப்பது உறுதி. இரண்டு பெரும் தலைவர்கள் இல்லாததால் இரு கட்சிகளுமே பெரும்பான்மையை நிரூபிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆகவே 2021ல் மாபெரும் அரசியல் மாற்றம் இருப்பது உறுதி.

விரைவில் கேப்டன் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்: பிரேமலதா விஜயகாந்த்

அப்போது அவர், “தொண்டர்களுடைய விருப்பம் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து நிற்க வேண்டும் என்பதுதான். ஆகவே செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கேப்டன் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அந்த தை மாதம் நல்ல ஒரு முடிவை கேப்டன் அறிவிப்பார். பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நடப்பது உறுதி. இரண்டு பெரும் தலைவர்கள் இல்லாததால் இரு கட்சிகளுமே பெரும்பான்மையை நிரூபிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆகவே 2021ல் மாபெரும் அரசியல் மாற்றம் இருப்பது உறுதி.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருடைய வெற்றிடத்தை நிரப்பும் தகுதி கேப்டனுக்கு மட்டும்தான் உள்ளது. ஆனால் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுதான் இறுதி முடிவாக அமையும். தமிழகத்தின் தற்போதைய ஆட்சியில் நிறையும், குறையும் கலந்தே உள்ளது. ஆட்சியை சிறப்பாக செய்ததாக பாராட்டவும் முடியாது, மோசமாக இருப்பதாக கருத்து சொல்லவும் முடியாது” எனக் கூறினார்.