விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தோல்வி!

 

விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தோல்வி!

கடலூர்

விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர். ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜகார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தோல்வி!

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து வந்தார். பாமக வேட்பாளர் 2ஆம் இடத்தில் தொடர்ந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மொத்தம், 26 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருணன் வெற்றிபெற்றார். .