பிரேமலதாவை சுற்றிவளைத்த அதிகாரிகள்; பிரச்சாரத்தில் பரபரப்பு!!

 

பிரேமலதாவை சுற்றிவளைத்த அதிகாரிகள்; பிரச்சாரத்தில் பரபரப்பு!!

பிரேமலதா கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விருத்தாசலம் சுகாதார ஆய்வாளர் அழைப்பு விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் முதல் முறையாக விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் சென்டிமென்டாக விருத்தாச்சலம் தொகுதியில் களம் காண்கிறார்.இதனால் கடந்த 18ம் தேதி விருத்தாச்சலம் வந்து வேட்புமனு தாக்கல் செய்த அவர் அங்கேயே தங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பிரேமலதாவை சுற்றிவளைத்த அதிகாரிகள்; பிரச்சாரத்தில் பரபரப்பு!!

இந்த சூழலில் இன்று விருத்தாச்சலம் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பிரேமலதா விஜயகாந்த்தை சுகாதாரத்துறை அலுவலர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அழைத்தனர். இதற்கு கட்சி நிர்வாகிகள் மறுப்பு தெரிவிக்கவே, அங்கு சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கினார்.

பிரேமலதாவை சுற்றிவளைத்த அதிகாரிகள்; பிரச்சாரத்தில் பரபரப்பு!!

சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென வந்து பிரேமலதாவை கொரோனா பரிசோதனை செய்ய சொல்ல காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்தபோது, கடந்த 18ம் தேதி பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் அவரது தம்பியும் கட்சியின் துணை செயலாளருமான எல் .கே. சதீஷ் உடன் இருந்தார் .தற்போது சுதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் சுதீஷின் குடும்பத்தினருக்கும் ,நண்பர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது. அந்த வகையிலே பிரேமலதா விஜயகாந்த்துக்கு சுகாதாரத்துறை நேரில் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.ஆனால் இதைப் புரிந்துகொள்ளாத தேமுதிகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கப் பார்க்கிறீர்கள் வர முடியாது என்று கூறி சுகாதாரத் துறை அலுவலர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.