மூன்று நாளில் வீடு திரும்புவார்; ஆன்லைன் மூலமாக கட்சி நிர்வாகிகளுடன் பேசப்போகிறார்! விஜயகாந்த் நலம் குறித்து பிரேமலதா

மூன்று நாளில் வீடு திரும்புவார்; ஆன்லைன் மூலமாக கட்சி நிர்வாகிகளுடன் பேசப்போகிறார்! விஜயகாந்த் நலம் குறித்து பிரேமலதா

மாநகராட்சி அலுவலர்களை, ‘தனிமைப்படுத்தப்பட்ட இல்லம்’ என்கிற ஸ்டிக்கர் ஒட்டவிடாமல் விரட்டியடித்த விவகாரத்தில், ’’பக்கத்து வீட்டில்தான் அதிகம் பாதிப்பு’’ என்று சொல்லி நழுவினார் பிரேமலதா விஜயகாந்த்.

மூன்று நாளில் வீடு திரும்புவார்; ஆன்லைன் மூலமாக கட்சி நிர்வாகிகளுடன் பேசப்போகிறார்! விஜயகாந்த் நலம் குறித்து பிரேமலதா

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மியாட் மருத்துவமனையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்துக்கு லேசான வைரஸ் தொற்றுதான் என்றும், கடந்த வாரத்தில் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, லேசான தொற்று இருப்பது தெரியவந்ததும் என்றும் சொன்னவர், மூன்று நாளில் குணமடைந்து வீடு திரும்பிவிடுவார் என்றும் தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த். மேலும், விஜயகாந்த்துக்கு எப்படி தொற்று வந்தது என்று தங்களுக்கு தெரியவில்லை. தவிர குடும்பத்தினர் வேறு யாருக்கும் தொற்று இல்லை என்றும் அவர் கூறினார்.

மூன்று நாளில் வீடு திரும்புவார்; ஆன்லைன் மூலமாக கட்சி நிர்வாகிகளுடன் பேசப்போகிறார்! விஜயகாந்த் நலம் குறித்து பிரேமலதா

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இல்லமாக அரசு அறிவித்து, ஸ்டிக்கர் ஓட்டிவருவது மாநகராட்சியின் முறை. அந்த முறையில், விஜயகாந்த் வீட்டிற்கும் ஸ்டிக்கர் ஒட்டச்சென்ற அலுவலகர்களை அவர்களின் வேலையை செய்யவிடாமல் விரட்டி அடித்திருக்கிறார்கள் விஜயகாந்த் வீட்டில் இருந்தவர்கள். இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘’தேமுதிக எப்போதும் அரசின் விதிமுறைகள் பின்பற்றும்’’என்றார். அவரிடம் மீண்டும் அதே கேள்வியை எழுப்பியதும், ‘’எங்கள் வீட்டில் அதிகம் பாதிப்பு இல்லை. பக்கத்து வீட்டில்தான் அதிகம் பாதிப்பு’’ என்று சொல்லி நழுவினார்.

மூன்று நாளில் வீடு திரும்புவார்; ஆன்லைன் மூலமாக கட்சி நிர்வாகிகளுடன் பேசப்போகிறார்! விஜயகாந்த் நலம் குறித்து பிரேமலதா