• February
    25
    Tuesday

Main Area

Main



சுபஸ்ரீ உயிரிழந்தது விதி! அதுக்கு அரசுக்கு என்ன பண்ணும்- பிரேமலதா விஜயகாந்த் 

Premalatha
Premalatha

சுபஸ்ரீ உயிர் இழப்பு எதிர்பாராத நிகழ்வு.அதிமுக பேனர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் பெரிது படுத்தியுள்ளார்   என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆவடியில் நடைபெற்ற தேமுதிக தலைவர்  விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “திருவள்ளூர் மாவட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் மாபெரும் மாநாடு விரைவில் நடக்கும். பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது என்ற சட்டத்தை மதிக்கும் ஒரே கட்சி தேமுதிக மட்டும் தான். விஜயப்பிரபாகரனுக்கு காதல் திருமணம் என வதந்திகள் பரப்பிவருகின்றனர்.

premalatha

விஜயப்பிரபாகரனுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் ஆனால் அது காதல் திருமணம் கிடையாது. பெரியவர்களாக பார்த்து நடைபெறும் திருமணமாக  தான் இருக்கும்.  சுபஸ்ரீ உயிர் இழப்பு எதிர்பாராத நிகழ்வு.அதிமுக பேனர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் பெரிது படுத்தியுள்ளார். சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும்,லாரி வந்ததும் விதி. தமிழகத்தில் செயின் பறிப்பு,கொலை என பல்வேறு நிகவுகள் நடைபெறுகிறது. தமிழை வியாபாரமாக்கிய ஓரே கட்சி திமுகதான். தேமுதிக அதிமுக கூட்டணியில் உள்ளது. இடைத்தேர்தல்  குறித்து விஜயகாந்த் முதல்வரிடம் பேசி முடிவு எடுப்பார்” என பேசினார். 

2018 TopTamilNews. All rights reserved.