‘கூட்டணி பேச்சுவார்த்தை தாமதத்தால் பயனில்லை’ : பிரேமலதா காட்டம்!

 

‘கூட்டணி பேச்சுவார்த்தை தாமதத்தால் பயனில்லை’ : பிரேமலதா காட்டம்!

அதிமுக தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தாமதிப்பதால் எந்த பயனுமில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா, கூட்டணி பேச்சுவார்த்தையைத் தாமதிப்பதால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையை தாமதித்தால் யாருக்கும் பயனில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக தாமதமின்றி தொடங்க வேண்டும். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது என்று கூறினார்.

‘கூட்டணி பேச்சுவார்த்தை தாமதத்தால் பயனில்லை’ : பிரேமலதா காட்டம்!

தொடர்ந்து, சசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், சசிகலா வந்தபின் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனது ஆதரவு சசிகலாவுக்கு இருக்கிறது என்று கூறினார். மேலும், திமுக கொடுக்கும் பொய் வாக்குறுதிகளை மக்கள் கவனித்து வருகின்றனர் என்றும் மக்கள் உஷாராகி விட்டனர் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவிடம் 40 தொகுதிகளை கேட்டிருப்பதாக தெரிகிறது. அதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளாததால் அதிமுக – தேமுதிக கூட்டணியில் பிரச்னை எழுந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.