கர்ப்பிணிகளை அதிகமாக தாக்கிய கொரோனா இரண்டாம் அலை… முக்கிய தகவல் இதோ!

 

கர்ப்பிணிகளை அதிகமாக தாக்கிய கொரோனா இரண்டாம் அலை… முக்கிய தகவல் இதோ!

கொரோனா இரண்டாம் அலையால் கர்ப்பிணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. முதல் அலை குழந்தைகள் மற்றும் முதியவர்களையே அதிகமாக தாக்கிய நிலையில், இரண்டாம் அலை அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி தாக்கியது. குறிப்பாக, கர்ப்பிணிகளை இரண்டாம் அலை தாக்கியது. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத காரணத்தால், அவர்களை பாதிப்பில் இருந்து காப்பதில் சிக்கல் நீடித்தது. எனினும், சில கர்ப்பிணிகள் தங்களது மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

கர்ப்பிணிகளை அதிகமாக தாக்கிய கொரோனா இரண்டாம் அலை… முக்கிய தகவல் இதோ!

இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட பெண்களுள் 28.7% பேருக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட 387 கர்ப்பிணிகளில் 111 பேருக்கு கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்ததாம். முதல் அலையின் போது கர்ப்பிணிகள் பாதிப்பு சதவீதம் 14.2 ஆக இருந்தது.

அதே போல, முதல் அலையின் போது 0.7 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் இரண்டாம் அலையில் 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இரண்டாம் அலையின் போது பாதிக்கப்பட்ட 1,530 கர்ப்பிணிகளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.