13 மணி நேரம் பிரசவ வலியுடன் அலைந்தும் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கர்ப்பிணி உயிரிழப்பு!

13 மணி நேரம் பிரசவ வலியுடன் அலைந்தும் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கர்ப்பிணி உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இதுவரை யை25,004 பேருக்கு கொரோனாதொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 650 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து டெல்லி அரசு திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதாவது மருத்துவமனையில் கூட்டம் கூடாமலிருக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்காரணமாக நொய்டாவில் ஒரு கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

13 மணி நேரம் பிரசவ வலியுடன் அலைந்தும் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கர்ப்பிணி உயிரிழப்பு!

நொய்டா பகுதியை சேர்ந்த நீலம். 8 மாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவும் ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். ஆனால் நீலத்தை எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததை காரணம் காட்டி கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்டார். 13 மணி நேரம் ஆம்புலன்சில் அலைந்தும் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் தாயும் சேயும் உயிரிழந்தனர்.