வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு – சிக்குகிறார் அக்குபங்சர் டாக்டர்

 

வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு  – சிக்குகிறார் அக்குபங்சர் டாக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ்(வயது28). இவரது மனைவி கோரிமா(வயது 27). திருமணமாகி இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது கோரிமா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி உயிரிழப்பு  – சிக்குகிறார் அக்குபங்சர் டாக்டர்

கடந்த சில தினங்களாக அவருக்கு நெஞ்சு வலி, வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவதிப்பட்ட அவரை தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்திருக்கிறார். கணவர் நேற்று அந்த மருத்துவர் இல்லாததால் அவசரத்திற்கு அக்குபங்சர் மருத்துவர் முருகேசன் என்பவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

வீட்டிற்கு வந்ததும் கோரிமாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பயந்து போன கணவன் ரியாஸ் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த கோரிமா உயிரிழந்திருக்கிறார்.

இதையடுத்து கோரிமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அக்குபங்சர் மருத்துவம் சான்றிதழ் பெற்றுவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார் முருகேசன். தவறான சிகிச்சையால்தான் இந்த உயிரிழப்பு நிகந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடந்து வருகிறது.

முருகேசனின் மெடிக்கலை இழுத்து மூடிய அதிகாரிகள், அவர் பயன்படுத்திய மருந்துகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.