darbar
  • January
    28
    Tuesday

Main Area

Mainகர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை? எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன? இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்

preganant lady
preganant lady

கர்ப்பக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள் எவை? எந்தப் பொருள்களில் நிறைய கிடைக்கின்றன? இந்தச் சத்துகள் குறைந்தால் என்ன பாதிப்பு உண்டாகும்  என்பதை பார்க்கலாம்

வைட்டமின் - ஏ

நோய்த்தொற்றுக்கு எதிராக உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகப்படுத்தும் மியூக்கஸ் மெம்பரேன் என்கிற சீதப்படல ஒருங்கிணைவைப் பராமரிக்க இது உதவுகிறது.

இச்சத்து குறைந்தால் தோல் வறண்டு சொறசொறப்பாகும்.  கண்ணின் கருவிழிப் படலம் காய்ந்து அதில் புண் உண்டாகும்.  கண் எரிச்சல், இரவு நேரத்தில் பார்வை குறைதல், மாலைக் கண், காயங்கள் எளிதில் ஆறாத நிலை போன்றவை வரும்.  இவற்றைப் போக்கவும் இயல்பான எலும்பு வளர்ச்சிக்கும், பல் வளர்ச்சிக்கும் இச்சத்து மிக முக்கியம்.

பால், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், மீன் எண்ணெய் ஆகிய விலங்குப் பொருள்களிலும், பப்பாளி, கேரட், முட்டைக்கோஸ், கீரை, முள்ளங்கி, கறிவேப்பிலை, சோளம், தக்காளி, வாழைப்பழம் போன்ற தாவர உணவுகளிலும் வைட்டமின் -ஏ அதிகம் உள்ளது.  தாவர உணவுகளில் உள்ள கரோட்டீன், வைட்டமின ஏ-வின் முன்னோடியாகும்.  கரும்பச்சை, அடர் மஞ்சள் காய்கறிகள் மற்றும் பழங்கள், வனஸ்பதி ஆயில் மற்றும் பால் ஆகியவற்றில் எல்லாம் வைட்டமின் - ஏ சத்து நிறைந்துள்ளது.

vitamin a

வைட்டமின் - பி

நல்ல ஊட்டச்சத்துக்குத் தேவையான எண்ணற்ற வேறு வேறு வைட்டமின்களை எல்லாம் பி-காம்ப்ளக்ஸ் பிரிவு உள்ளடக்கியிருக்கிறது.  அவற்றுள் தையாமின் (வைட்டமின் பி-1), வைட்டமின் பி - 2 எனப்படும் ரிபோஃபிளேவின், நையாசின் எனப்படும் வைட்டமின் பி - 6, ஃபோலாக்சின் எனப்படும் ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி - 12 எனப்படும் சையானோ கோபாலமின் ஆகியவை அடங்கும்.

இவை நொதிப்பொருள்கள் (என்சைம்கள்) மற்றும் கூட்டு நொதிப்பொருள்கள் (கோ - என்சைம்கள்) ஆகியவற்றின் கூட்டுப் பொருள்கள் போல் செயல்பட்டு உடலில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன.  அவற்றுள் செல்சுவாசம், குளுக்கோஸ் உயிர்வெளியேற்றம் மற்றும் வளர்சிதை வினைமாற்ற சக்தி ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

வைட்டமின் - பி சத்து குறைந்தால் பசியின்மை, வலுவின்மை, வீக்கம், மெதுவான நாடித்துடிப்பு, வாதம் முதலியன ஏற்பட்டு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிற பெரிபெரி என்ற நோய் உண்டாகும்.

நியாசின் என்ற வைட்டமின் - பி சத்து குறைந்தால் வாய்ப்புண், தோல் எரிச்சல், அஜீரணம், மந்தம், தோல் வெடிப்பு ஆகியவை உண்டாகும்.

ஃபாலிக் அமிலம் குறைந்தால் ரத்தசோகை உண்டாகும்.

பி-6 என்ற வைட்டமின் குறைந்தால் ரத்த சோகை, உடல் எடை குறைதல், அதிகமான மசக்கை ஆகியவை உண்டாகும்.

பி-12 என்ற வைட்டமின் குறைந்தால் ரத்த சோகை உண்டாகும்.

வைட்டமின் - பி சத்துகள் எல்லாம் ஒரே உணவில் மட்டும் சேர்ந்து காணப்படுவதில்லை.  பால், முழு தானியம், பிற தானிய வகைகள் மற்றும் ரொட்டிகள், மொச்சை, அடர் பச்சை நிற காய்கறிகள், முட்டைகள், இறைச்சிகள் ஆகியவற்றைக் கூட்டாகச் சேர்த்து சாப்பிடும்போது இச்சத்து கிடைக்கிறது.

vitamin b

ஃபாலிக் அமிலம்

பி - வைட்டமின்களில் ஒன்று ஃபாலிக் அமிலம்.  இது டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ.  உருவாக்கத்துடன் தொடர்புடையது.  ஃபாலிக் அமிலக் குறைபாடுகள் இருந்தால் செல்பிரிதல் இயல்பாக நடக்காது.

கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் ரத்த அளவு அதிகரிக்கவும் ஃபாலிக் அமிலம் தேவைப்படுகிறது.  கர்ப்பக் காலத்தின் ஆரம்பத்திலேயே தாய்க்கு போதுமான அளவு ஃபாலிக் அமிலச் சத்து இருந்தால் குழந்தைக்கு நரம்பு மண்டலக் குறைபாடு ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறைவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

பச்சைக் காய்கறிகள், மற்ற கீரைகள், ஈரல்கள், ஈஸ்ட், அவரை, மொச்சைகள், கொட்டைகள், முழு தானியங்கள் ஆகியவை ஃபாலிக் அமிலம் அதிகம் உள்ள பொருள்களாகும்.  சமைக்கும்போது அல்லது சேமித்து வைக்கும் போதே எண்பது சதவீதம் ஃபாலிக் அமிலச் சத்து அழிக்கப் பட்டுவிடுகிறது.  எனவே, இந்த ஊட்டச்சத்துப் பொருள் அவ்வப்போது பரிந்துரை செய்யப்படுகிறது.


வைட்டமின் - சி

உடல் செல்களையும், திசுக்களையும் ஒருங்கிணைப்பதால் சில வேளைகளில் சிமெண்ட் என்றே இவை அழைக்கப்படுகின்றன.

உறுதியான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும், நோய்த்தொற்று ஆகியவற்றை எதிர்த்து உடலின் திறனை அதிகரிப்பதற்கும் இது பயன்படுகிறது.

இந்தச் சத்து குறைந்தால் சொறி, கரப்பான் நோய், தலைச்சுற்றல், வாய்ப்புண், எலும்பு மூட்டுகளில் வலி, பற்களில் வலுவின்மை, ஈறுகளில் ரத்த ஒழுக்கு, மூக்கு மற்றும் பிற உறுப்புகளில் ரத்தக் கசிவு போன்ற பல தொல்லைகள் உருவாகும்.

புத்தம் புதிய காய்கறிகளிலும், பழங்களிலும் வைட்டமின் - சி சத்து காணப்படுகிறது.  புத்தம் புதிய ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, கொய்யா, தக்காளி, பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், ஆரஞ்சு, நாவல் வழம், மிளகாய், முருங்கைக்காய், பச்சைப் பட்டாணி, கடலை, உருளைக் கிழங்கு, முளைத்த கடலை, கொய்யா போன்றவற்றில் வைட்டமின் - சி அதிகம் உள்ளது.

காற்றில் வெளிக்காட்டினாலோ, அதிகமாகச் சமைத்தாலோ அல்லது அதிக நீரில் சமைத்தாலோ வைட்டமின் - சி அழிந்துவிடும்.

vitamin c

வைட்டமின் -டி

எலும்பில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உருவாகவும், அது சேர்வதற்கும், அதன் பயன்பாட்டுக்கும், பல் மொட்டு உருவாவதற்கும் வைட்டமின் - டி அவசியம்.

இந்தச் சத்து குறைந்தால் ரிக்கெட்ஸ் எனப்படும் நோய் வரும்.  எலும்புகளில் பலவீனம், மண்டையோட்டு எலும்புகள் பொருந்தாத நிலை ஆகிய குறைபாடுகள் தோன்றும்.

பால், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், குறிப்பிட்ட சில மீன்கள் ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் - டி உள்ளது.  குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் எனப்படும் நோயைத் தடுப்பதற்குப் பல ஆண்டுகளாக காட் லிவர் ஆயில் எனப்படும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  வைட்டமின் - டி யைத் தயாராக்குவதற்கு இது வனஸ்பதி எண்ணெய், வெண்ணெய் மற்றும் பாலுடன் சேர்க்கப்படுகிறது.  தோலின் மீது சூரிய வெளி்ச்சம் படும் செயலினால் மனித உடலும்கூட சிறிதளவு வைட்டமின் - டியை உற்பத்தி செய்கிறது.

vitamin d

வைட்டமின் - ஈ

வைட்டமின் - ஈ முக்கியமாக ஓர் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்.  உறிஞ்சப்பட முடியாத கொழுப்பு அமிலங்களில் உள்ள உயிர்வலியேற்றத்தைக் குறைக்கவும், செல் சவ்வுகளின் ஒருங்கிணைவைப் பராமரிக்கவும் உதவுகிறது.  இது சில குறிப்பிட்ட நொதிப்புச் செயல்கள் மற்றும் வளர்ச்சிதை மாற்ற பிரதிவினைகளிலும் சம்பந்தப்பட்டுள்ளது.

காய்கறிக் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள், பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், தானியங்கள், கொட்டைகள், மஞ்சள் கரு, முளைகட்டிய தானியங்கள், அவரை, தக்காளி, கோதுமை ஆகியவை வைட்டமின் - ஈ அதிகம் உள்ள உணவுகளாகும்.

vitamin e

வைட்டமின் - கே

ரத்தத்தை உறைய வைக்கும் பொருளான ப்ரோத்ராம்பின் உருவாக இது முக்கியக் காரணியாக உள்ளது.  இந்தச் சத்து குறைந்தால் ரத்தம் இயல்பாக உறையாது.  தொடர்ந்து ரத்தக்கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

கீரைகள், பச்சைக் காய்கறிகள், உருளைக் கிழங்கு, பன்றி ஈரல், பச்சைப் பட்டாணி, முட்டை கோஸ் ஆகியவை இந்த வைட்டமின் அதிகம் உள்ள பொருள்களாகும்.  வைட்டமின் - கே இயற்கையிலும் கிடைக்கிறது.  சிறுகுடலின் பாதையில் கீழ்ப்பகுதியில் உள்ள சில நல்ல பாக்டீரியாக்கள் நமக்காக இதை உருவாக்குகின்றன.

vitamin k

 

2018 TopTamilNews. All rights reserved.