“முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்

“முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில்  முன்னுரிமை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்

“அரசு அலுவலர்களின் பணித்திறன் உயர்த்தும் வகையில் பயிற்சிகள்; மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

“முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில்  முன்னுரிமை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மை துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு ,நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் ,மனிதவள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

“முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில்  முன்னுரிமை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்

இது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகம் மூலம் அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து துறைகளிலும், இணையதளம் மூலம் தகவல் தரும் வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தினார். அரசு அலுவலகங்களில் மனித வள ஆற்றலை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பினை பெருகுவதற்கும், அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் எழுதிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

“முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில்  முன்னுரிமை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்

அத்துடன் பவானிசாகரில் உள்ள அடிப்படை பயிற்சி மையத்தால் அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சி இணை காணொலி காட்சி மூலம் இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.