‘தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை’ – அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ!

‘தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை’ – அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ!

தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதால் மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் இயல்பான அளவை விட மழை குறைவாகவே பெய்து வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

‘தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை’ – அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ!

இந்த நிலையில், அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 797 என்றும் மொத்தமாக 4133 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்தில் தங்க வைக்க 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4713 முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அதே போல கொரோனாவை கருத்தில் கொண்டு பள்ளிகள், திருமண மண்டபங்கள் என 4680 தங்கும் இடங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

‘தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை’ – அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ!

பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் மக்களை மீட்கவும் 662 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களை மீட்க 43,409 முதல் நிலை மீட்பாளர்களும் 8,871 முதல் நிலை மீட்பாளர்களும் பலத்த காற்றினால் விழும் மரங்களை அகற்ற 9,909 முதல் நிலை மீட்பாளர்களும் நீச்சல் தெரிந்த வீரர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

‘தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை’ – அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ!

அதே போல தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை என அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. மேலும்,மக்கள் தொடர்பு கொள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070), மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), TNSMART செயலி உட்பட அனைத்தும் ஆயத்தமாக இருக்கிறது.