சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. பயம் காட்டினாலும்… அசாமில் பா.ஜ.க. ஆட்சிதான்… கருத்து கணிப்பில் தகவல்

 

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. பயம் காட்டினாலும்… அசாமில் பா.ஜ.க. ஆட்சிதான்… கருத்து கணிப்பில் தகவல்

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. பிரச்சினையாக உருவெடுத்தாலும், பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் கூறுகிறது.

அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து அசாமில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. அந்த கருத்து கணிப்புகள் முடிவுகள், முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சியை குறுகிய வித்தியாசத்தில் வெற்றியை தக்கவைத்து கொள்ளும் என தெரிவிக்கின்றன.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. பயம் காட்டினாலும்… அசாமில் பா.ஜ.க. ஆட்சிதான்… கருத்து கணிப்பில் தகவல்
காங்கிரஸ்

எதிர்வரும் அசாம் சட்டப்பேரவை தேர்தலில், குடியுரிமை திருத்த சட்டம் 2019 (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) நெருக்கடியை கொடுத்தாலும் பா.ஜ.க.-ஏ.ஜி.பி. கூட்டணிக்கு 67 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பான்மை தேவையான இடங்களை காட்டிலும் அதிகம். ஆக, பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். அதேசமயம் கடந்த 2016 அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 74 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. பயம் காட்டினாலும்… அசாமில் பா.ஜ.க. ஆட்சிதான்… கருத்து கணிப்பில் தகவல்
சர்பானந்தா சோனோவால்

அதேசமயம் ஏ.ஐ.யு.டி.எப்., போடோ மக்கள் முன்னணி மற்றும் 3 இடதுசாரி கட்சிகள் என மிகப்பெரிய கூட்டணியுடன் களமிறங்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் 57 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்கு வங்கில் பெரிய முன்னேற்றம் இருக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது. அசாமின் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் ஆளும் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வந்து இருப்பது குறித்து முதல்வர் சர்பானந்தா சோனோவால் கூறுகையில், பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும், எனது அரசாங்கத்தின் வளர்ச்சி பணிகள் கட்சிக்கான வாக்குகளாக மாறும் என்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.