கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?

கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் திருவிழா உச்சத்தை எட்டியுள்ளது. ஆம் இன்று தல தோனியின் அணியான சிஎஸ்கேவுக்கு மேட்ச். சிஎஸ்கேவுடன் இளம் வீரர்களைக் கொண்டிருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியிடவிருக்கிறது. ஐபிஎல் மாஸ்டர் தோனியுடன் இளங்காளை ரிஷப் பண்ட் மோதுகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. எல்லோரும் பிபி மாத்திரைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?
கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?

இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் சென்னை அணியே அதிக போட்டிகளில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. கடந்த சீசனில் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக பிளேஆஃப் செல்லாமல் வெளியேறியது சிஎஸ்கே. குறிப்பாக இளம் டெல்லி அணியுடன் மோதிய இரு போட்டிகளிலும் மண்ணைக் கவ்வி மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்குள் அவ்வளவு பிரச்சினைகள் இருந்தன. இதனை வெளிப்படையாகவே தோனி ஒப்புக்கொண்டு விட்டார்.

கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?

தவறுகளைத் திருத்திக்கொள்ளும்போது தான் ஜொலிக்க முடியும் என்ற கூற்றுக்கு அணி சேர்க்கும் விதமாக புதிய அணியைக் கட்டமைத்திருக்கிறார் தோனி. மினி ஏலமாக போய்விட்டதால் பாதியாகவே கட்டமைக்க முடிந்திருக்கிறது. இருப்பினும் அணிக்குள் அனுபவ வீரர் ரெய்னா நுழைந்திருப்பது சிஎஸ்கேவுக்கு எக்கச்சக்கமான பூஸ்ட் கிடைத்திருக்கிறது. அதேபோல ஜடேஜா, ஷர்துல் தாக்கூரின் ஃபார்ம் வேற லெவலில் இருக்கிறது. விஜய் ஹசாரே போட்டியில் விளையாடிய உத்தப்பா, ஜெகதீசன் ஆகியோரும் ஃபார்மும் அணிக்கு நம்பிக்கையைக் கூட்டியுள்ளது.

கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?

இம்முறை ஏலத்தில் கிருஷ்ணப்பா கவுதம், மொயின் அலி என்ற இரு ஆல்ரவுண்டர்களை தூக்கி கெத்தாக இருக்கிறது. இதனால் பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி ஸ்பார்க்குடன் சிஎஸ்கே வலம் வருகிறது. சுட்டிக்குழந்தை சாம் கரண் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக தனி ஒருவனாகப் போராடியதை யாரும் மறந்துவிடாதீர்கள். சிஎஸ்கேவுக்கு கடைசி வரை நிலைத்து நிற்கும் பேட்டிங் லைன்அப் இருக்கிறது என்பதே கூடுதல் பிளஸ். இருப்பினும் தோனி, ரெய்னாவின் ஃபார்மே சிஎஸ்கேவின் வெற்றியைத் தீர்மானிக்கும்.

கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?

டெல்லி கேப்பிட்டல்ஸை பொறுத்தவரை ஆரம்பமே சோதனையாக தான் அமைந்திருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடும் போது ஸ்ரேயாஷ் ஐயருக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. அறுவைச் சிகிச்சை வேறு செய்திருப்பதால் முதல் பாதி ஐபிஎல் வரை அவர் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. ஒரு கேப்டனாகவும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அவரை அணி மிஸ் செய்யும். அவருக்குப் பதிலாக தவுசன் வாலா பட்டாசு ரிஷப் பண்ட் கேப்டனாகப் பொறுப்பேற்கிறார். முன் அனுபவம் இல்லாத பண்ட்டின் கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்பது யாருக்குமே தெரியாத புதிராகவே இருக்கிறது.

கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?

பவுலிங்கில் வெற்றிக் கூட்டணியான ரபாடா- நோர்க்கியா இணை இன்னமும் தனிமைப்படுத்தலில் இருப்பதால் அணிக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. உமேஷ் யாதவ், ஸ்டீவ் ஸ்மித், சாம் பில்லிங்ஸ், டாம் கரண் ஆகியோரை ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். நான்கு ஃபாரின் கோட்டைவை நிரப்புவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஸ்ரேயாஷ் இல்லாத குறையை ரஹானே தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பொஷிசனில் ரஹானே இறங்குவார்.

கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?

அனுபவ வீரர்காள் தவான், அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோர் இருப்பதும் சாதகமான அம்சம். கடந்த சீசனில் ஃபார்மில் இல்லாமல் விமர்சனங்களை வாரிக்குவித்த பிரித்வி ஷா உள்ளூர் போட்டிகளில் தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த சீசனில் பட்டாசாக வெடிப்பார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஜொலிக்கும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அணியின் முக்கியமான வீரராக உள்ளார். அனுபவம், கேப்டன்ஷிப் என அனைத்திலும் சிஎஸ்கே டெல்லியை விட டாப்பில் தான் இருக்கிறது. இருந்தாலும் அசால்டாக இருந்தால் டெல்லி இளங்காளைகள் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்.

கடந்த சீசனில் இருமுறை டெல்லியிடம் வீழ்ந்த சிஎஸ்கே… வட்டியும் முதலுடன் திருப்பி கொடுப்பாரா தல தோனி?

டாஸில் தோனியை வீழ்த்திவிட்டார். ஆட்டத்தில் வீழ்த்துவாரா என பார்ப்போம். டெல்லி பவுலிங்கை தேர்வுசெய்துள்ளது.

பிளேயிங் 11:

சிஎஸ்கே: தோனி, ரெய்னா, டு பிளெஸ்சிஸ், ராயுடு, மொயின் அலி, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், சஹர், சாம் கரண், ருதுராஜ், பிரோவோ

டெல்லி: பண்ட், அஸ்வின், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ரஹானே, அமித் மிஸ்ரா, பிரித்வி ஷா, வோக்ஸ்,டாம் கரண், ஷிகர் தவான், ஆவேஷ் கான், ஹெட்மைர்