பிரஷாந்த் கிஷோரின் தி.மு.க வேட்பாளர் பட்டியல் ரெடி… தி.மு.க நிர்வாகிகள் கொந்தளிப்பு!

பிரஷாந்த் கிஷோரின் தி.மு.க வேட்பாளர் பட்டியல் ரெடி… தி.மு.க நிர்வாகிகள் கொந்தளிப்பு!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட வேண்டியவர்கள் பட்டியலை பிரஷாந்த் கிஷோர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தி.மு.க தலைவர்கள், நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க தேர்தல் பிரசார வியூக வகுப்பாளராக பிரபல அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனை ஆண்டு பாரம்பரிய கட்சியில் ஐடியா சொல்ல பல நூறு கோடி ரூபாய் கொடுத்து நிறுவனம் எல்லாம் நியமிப்பது தேவையா என்ற கேள்வி எழுந்தது. இது கட்சிக்குள்ளும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிரஷாந்த் கிஷோரின் தி.மு.க வேட்பாளர் பட்டியல் ரெடி… தி.மு.க நிர்வாகிகள் கொந்தளிப்பு!
பிரஷாந்த் கிஷோரின் தி.மு.க வேட்பாளர் பட்டியல் ரெடி… தி.மு.க நிர்வாகிகள் கொந்தளிப்பு!

இந்த நிலையில், அறிவாலயத்தில் நேற்று பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இதில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட வேண்டிய வேட்பாளர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வே குறித்து ஸ்டாலின், துரை முருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகளிடம் விளக்கினாராம் பிரஷாந்த் கிஷோர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த கூட்டம் நடந்துள்ளது.

மாவட்டச் செயலாளர்களும் தலைவரும் இணைந்து எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான முடிவை, மூன்றாவது நபர் எடுக்க அனுமதிப்பது சரியா என்று பல நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தி.மு.க வேட்பாளர் வரைக்கும் பிரஷாந்த் கிஷோர் கை வைத்திருப்பது கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.