• March
    28
    Saturday

Main Area

Main



மு.க.ஸ்டாலினை அசிங்கப்படுத்திய பிரசாந்த் கிஷோர்...!

ஸ்டாலின்
ஸ்டாலின்

வயசு 64 இல்லை 68 என தெரியவில்லை ஆனால் இன்னும் இளைஞர் அணி தலைவர் பொறுப்பை வைத்திருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடந்த காலத்தில் பிரசாந்த் கிஷோர் மிக மோசமாக நையாண்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

stalin

திமுக வருகிற சட்டசபை தேர்தலை பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும், இந்தியன் பேக் நிறுவனம் உடன் இணைந்து சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்காக இந்த நிறுவனம் பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், 2021ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.,வுடன் இணைந்து இந்நிறுவனம் பணியாற்ற உள்ளதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளது, அரசியல் களத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் திமுக நிலை மாறுபட்டது, அக்கட்சி பல ஆண்டுகளாக பிராமணர்களை விமர்சனம் செய்தே வளர்ந்துள்ளது, இந்நிலையில் அக்கட்சி வெற்றி பெற பிரசாந்த் கிஷோர் எனும் பிராமணரை திமுக அனுக்கிருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர், இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை பேட்டி ஒன்றில் அவருக்கு இங்கிலிஷ் இந்தி எதுவும் தெரியாது, மொழிபெயர்ப்பாளர் வைத்துதான் பேசினோம்,

stalin

வயசு 64 இல்லை 68 என தெரியவில்லை ஆனால் இன்னும் இளைஞர் அணி தலைவர் பொறுப்பை வைத்திருக்கிறார் என மிகவும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த திமுகவினர் இப்படி நம் தலைவரை இகழ்ந்தவர் சொல்வதை கேட்டுத்தான் நாம் வேலை செய்யவேண்டுமா என குமுறி வருகின்றனர், சிலர் வெளிப்படையாக பொதுவெளியில் எழுதியும் தங்கள் எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.