குறைந்தபட்சம் பொறுமையாக இருக்க ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்.. மோடிக்கு பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்

குறைந்தபட்சம் பொறுமையாக இருக்க ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்.. மோடிக்கு பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்

குறைந்தபட்சம் பொறுமையாக இருக்க ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சமாளிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அவரச வழக்காக விசாரித்தது.

குறைந்தபட்சம் பொறுமையாக இருக்க ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்.. மோடிக்கு பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்
ஆக்சிஜன் சிலிண்டர்கள்

அப்போது, இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாக கேளுங்கள் அல்லது திருடுங்கள். ஆக்சிஜன் அளிப்பது உங்கள் வேலை என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் மிகவும் கோபத்தில் தெரிவித்து இருந்தனர்.

குறைந்தபட்சம் பொறுமையாக இருக்க ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்.. மோடிக்கு பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்
பிரதமர் மோடி

ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடியை தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார். பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில், ஆக்சிஜன் விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது தொடர்பாக வெளியான செய்தியை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும், நரேந்திரமோடி சார், ஆயிரக்கணக்கான மக்கள் சொல்கிறார்கள்-எங்களால் சுவாசிக்க முடியாது, எங்களால் சுவாசிக்க முடியாது. குறைந்தபட்சம் பொறுமையாக இருக்க ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.