காந்தி பேம்லியுடன் திடீர் மீட்டிங்…மோடியை வீழ்த்த பிகே எடுத்த பிரமாஸ்திரம்!

 

காந்தி பேம்லியுடன் திடீர் மீட்டிங்…மோடியை வீழ்த்த பிகே எடுத்த பிரமாஸ்திரம்!

அரசியல் களத்தின் நவீன சாணக்கியன் என்று அழைக்கபடுகிறார் பிரசாந்த் கிஷோர். அந்தளவிற்கு இந்திய அரசியலில் பெரும் வீச்சை ஏற்படுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இப்போது கூட மேற்கு வங்கத்தில் மம்தாவையும், தமிழ்நாட்டில் ஸ்டாலினையும் அரியணையில் அமர்த்தி வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கும் பாஜகவுக்கும் இருந்த போட்டியை விட பிரசாந்த் கிஷோருக்கும் பாஜகவுக்குமே பலத்த போட்டி இருந்தது.

காந்தி பேம்லியுடன் திடீர் மீட்டிங்…மோடியை வீழ்த்த பிகே எடுத்த பிரமாஸ்திரம்!

மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் ஜெயித்துவிட்டால் நான் தேர்தல் வியூக பணியிலிருந்து ஒதுங்கிவிடுவேன் என்று சவால் விடுத்தார். தேர்தல் முடிவுகள் வெளியானபோதே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “தேர்தல் வியூகப் பணிகளை இனிமேலும் நான் தொடர விரும்பவில்லை. இதுவரை என்ன செய்ய வேண்டுமோ அதைச் சிறப்பாகச் செய்துவிட்டேன். வேறு எதாவது செய்ய ஆசைப்படுகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாக தோல்வியுற்றிருக்கிறேன். நான் அரசியலுக்குத் திரும்பி வெற்றிபெற முயற்சிப்பேன்” என்றார்.

காந்தி பேம்லியுடன் திடீர் மீட்டிங்…மோடியை வீழ்த்த பிகே எடுத்த பிரமாஸ்திரம்!

பிரசாந்த் கிஷோர் தற்போது வரை வேற எந்தக் கட்சிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் பாஜகவுக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார். 2024ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலுக்கான திட்டப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார். இதன் காரணமாக பிராந்தியங்களில் பாஜக கூட்டணியில் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒரு அணியாக திரட்டு வேலையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் அடுத்தாண்டு நடைபெறவிருக்கக் கூடிய உத்தரப் பிரதேச தேர்தல் மிக முக்கியமானது. மக்களவைத் தேர்தலுக்கான வெள்ளோட்டமாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

காந்தி பேம்லியுடன் திடீர் மீட்டிங்…மோடியை வீழ்த்த பிகே எடுத்த பிரமாஸ்திரம்!

பிகேவின் செயல்பாடுகளும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. அண்மையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இரு முறை சந்தித்திருக்கிறார். இச்சூழலில் நேற்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த மீட்டிங்கில் பாஜகவிற்கு எதிராக வியூகங்கள் வகுக்க ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச தேர்தலை முன்னிட்டு கட்சியைப் பலப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் காங்கிரஸின் ஏற்பட்ட மோதலை தீர்க்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

காந்தி பேம்லியுடன் திடீர் மீட்டிங்…மோடியை வீழ்த்த பிகே எடுத்த பிரமாஸ்திரம்!

தற்போது புதிய தகவல் ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அவர் இணையப் போவது தான் அந்தத் தகவல். நேற்று நடைபெற்ற மீட்டிங்கில் இதுகுறித்து பேசப்பட்டதாகவும், 2024 மக்களவை தேர்தல் 2022 உபி தேர்தலை முன்னிட்டு இவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டதாகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு நிதிஷ் குமாரின் ஜனதா தளத்தில் இணைந்தார். ஆனால் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 2020ஆம் ஆண்டு பிகேவை நிதிஷ் குமார் சஸ்பெண்ட் செய்தார்.