பா.ஜ.க. தேர்தலில் இரட்டை இலக்கை தாண்டினால் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுகிறேன்.. பிரசாந்த் கிஷோர் சவால்..

பா.ஜ.க. தேர்தலில் இரட்டை இலக்கை தாண்டினால் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுகிறேன்.. பிரசாந்த் கிஷோர் சவால்..

மேற்கு வங்க தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தை (தொகுதிகளின் எண்ணிக்கை) தாண்டினால் மேற்கு வங்கததை விட்டு வெளியேறுகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமித் ஷா தனது 2 நாள் மேற்கு வங்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பி விட்டார். மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த பா.ஜ.க. பொது கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில் கூறுகையில், மேற்கு வங்கத்தை ஆட்சி செய்ய பா.ஜ.க.வுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால் மாநிலத்தை தங்க வங்காளமாக மாற்றுவோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் 200க்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

பா.ஜ.க. தேர்தலில் இரட்டை இலக்கை தாண்டினால் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுகிறேன்.. பிரசாந்த் கிஷோர் சவால்..
பிரசாந்த கிஷோர்

இதற்கு தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் வியூகங்கள் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில், ஆதரவு ஊடகங்களின் ஒரு பகுதியால் பா.ஜ.க. மிகைப்படுத்தப்பட்டுள்ளது, உண்மையில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. இரட்டை இலக்கங்களை (தேர்தல் வெற்றி) கடக்க போராடும். தயவுசெய்து இந்த டிவிட்டை ஷேவ் செய்து கொள்ளுங்கள். பா.ஜ.க. இதனை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டால் நான் இந்த இடத்தை விட்டு காலி செய்து விடுகிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.

பா.ஜ.க. தேர்தலில் இரட்டை இலக்கை தாண்டினால் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுகிறேன்.. பிரசாந்த் கிஷோர் சவால்..
அமித் ஷா

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியில் உள்ளார். அடுத்த ஆண்டு மத்தியில் அம்மாநிலத்தில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தல்கள் போல் எதிர்வரும் தேர்தல் மம்தாவுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது. அம்மாநிலத்தில் பா.ஜ.க. அசூர வளர்ச்சி கண்டு வருகிறது. இது மம்தாவுக்கு கொஞ்சம் கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோரை மம்தா நியமனம் செய்துள்ளார்.