பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க சாத்தியமில்லை… எனக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை.. பிரசாந்த் கிஷோர்

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க சாத்தியமில்லை… எனக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை.. பிரசாந்த் கிஷோர்

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் நிதிஷ் குமாரின் பதவிக்காலம் வரும் அக்டோபரில் நிறைவடைய உள்ளது. அதனால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக களத்தில் இறங்கி பணியாற்ற கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. உதாரணமாக பா.ஜ.க. ஆன்லைனில் கூட்டங்களை நடத்தியது.

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க சாத்தியமில்லை… எனக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை.. பிரசாந்த் கிஷோர்

இந்த சூழ்நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பீகாரில் சரியான நேரத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாய்ப்பு குறைந்து வருவதை நான் காண்கிறேன். பீகார் நிலைமை கோவிட்-19 மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்ற கட்டளையிடுவதால், தேர்தல் நடத்தப்படக்கூடாது, அது நடத்தப்படாது.

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க சாத்தியமில்லை… எனக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை.. பிரசாந்த் கிஷோர்

கோவிட்-19 நிலைமை மாநிலத்தில் உச்சத்தில் இருக்கும்போது, 7 கோடி வாக்காளர்களை தங்களை வீடுகளை விட்டு வெளியேறி வாக்களிக்க சொல்வது சாத்தியமில்லை. இந்த முறை பீகார் தேர்தலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஏனெனில் நான் அதில் பங்கேற்க மாட்டேன். ஆனால் ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்தலை நடத்த எந்த முயற்சி மேற்கொண்டாலும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். மெய்நிகர் பேரணிகளின் முடிவை அரசியல் கட்சிகள் கண்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.